Connect with us
 

News

சூது கவ்வும் 2 படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக மிர்ச்சி சிவா !

Published

on

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, அஷோக் செல்வன் நடிப்பில் வெளியான திரைப்படம் சூது கவ்வும் அனைத்து வகையிலும் மிகப்பெரிய வெற்றி திரைப்படம் இது. டார்க் காமெடி பாணியில் வெளியான இப்படத்தை இன்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தை தயாரித்த சி.வி.குமார் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கவுள்ளாராம். எம்.எஸ்.அர்ஜூன் என்பவர் இப்படத்தை இயக்கவுள்ளார்.

இதில் விஜய்சேதுபதிக்கு பதிலாக நடிகர் மிர்ச்சி சிவா நடிக்கவுள்ளாராம். மேலும் சத்யராஜ், கருணாகரன், ராதாரவி, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். நாளை முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Continue Reading