News
ஹிப்ஹாப் ஆதியின் வீட்டில் கல் எறிந்த மர்ம நபர்கள் கைது !

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பின்னர் நடிகராக நடிக்க ஆரம்பித்தார்.
இவரின் வீடு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் உள்ளது. இவரின் வீட்டுக்கு சில மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனால் இவரின் வீட்டின் முன்பகுதி சேதமடைந்தது இதுகுறித்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்தவுடன் அடுத்த நிமிடமே விரைந்து வந்து ஆதியின் வீட்டில் கல் எரிந்த மர்ப நபர்களை விரட்டி பிடித்தனர்.
இதனை அடுத்து ஆதியின் வீட்டில் கல் எறிந்தவர்கள் பிரேம்குமார் மற்றும் அர்ஜூன் என்றும் குடித்து விட்டு யாருடைய வீடு என்று தெரியாமல் கல் வீடியதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் இருவரையும் கைது செய்த போலீஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.