Teaser
நானி மிரட்டும் தசரா டீசர் வெளியானது !

இயக்குநர் ஶ்ரீகாந்த் ஒடலா இயக்கத்தில் நானி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் தசரா. இப்படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.
இன்று இப்படத்தின் அதிகாரபூர்வ டீசரை எஸ்.எஸ். ராகமெளலி, தனுஷ், ஷாஹித் கபூர், துல்கர் சல்மான், ரஷித் செட்டி ஆகியோர் வெளியிட்டனர். நிலக்கதி சுரங்கங்களில் பணிபுரியும் மக்களின் உலகத்தை அவர்களின் வாழ்வியலையும் அங்கு அவர்கள் சந்திக்கும் பிரச்சனை அந்த பிரச்சனையிலிருந்து அவர்கள் எப்படி தங்களை காத்துக்கொள்கிறார்கள் என்பது இப்படம் சொல்ல வருகிறது.
நானியின் அந்த வெறித்தனமான தோற்றம், பேச்சு, பாவனை, உடல்மொழி என அனைத்தாலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மார்ச் 30-ம் தேதி தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.