Connect with us
 

News

நேசிப்பாயா திரைப்படம் அனைத்தும் கலந்த கதாபாத்திரமாக இசையும் இருக்கிறது – யுவன் ஷங்கர் ராஜா !

Published

on

நேசிப்பாயா திரைப்படத்தில் எமோஷன், ரொமான்ஸ், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கதாபாத்திரமாக இசையும் இருக்கிறது” – யுவன் ஷங்கர் ராஜா!

இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா காம்பினேஷனில் நிறைய மறக்க முடியாத பாடல்கள் வந்திருக்கிறது. இந்த ஹிட் காம்பினேஷன் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ‘நேசிப்பயா’ படத்தில் இணைந்துள்ளனர். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இசைக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட இந்தப் படத்தில் பணிபுரிந்தது பற்றிய மகிழ்வான அனுபவத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பகிர்ந்து கொள்கிறார்.

யுவன் ஷங்கர் ராஜா கூறும்போது, “எனது நண்பர் விஷ்ணுவர்தனுடன் பணிபுரிவது எப்போதும் மகிழ்ச்சியான விஷயம். நாங்கள் இணைந்து பணிபுரிந்த படங்களை கொண்டாட ரசிகர்கள் ஒருபோதும் தவறியதில்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு நாங்கள் ஒன்றாக வேலை செய்யத் தொடங்கியபோது, இசை ஆர்வலர்கள் கொண்டாடும்படியான இசையைக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். நாங்கள் எதிர்பார்த்தபடி பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருவதில் மகிழ்ச்சி” என்றார்.