News
நிச்சயமாக சூர்யாவும் நானும் மீண்டும் இணைந்து நடிப்போம் – ஜோதிகா !

தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகை ஜோதிகா. இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘உடன் பிறப்பே’ இந்த படம் ஜோதிகாவிற்கு 50-வது திரைப்படம் அக்டோபர் 14-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
அண்ணன் – தங்கை உறவை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது சசிகுமார் ஜோதிகாவின் அண்ணனாக நடித்துள்ளார். ஜோதிகாவும் கணவராக சமுதிரக்கனி நடித்துள்ளார். இரா.சரவணன் இப்படத்தை இயக்கியுள்ளார். சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தின் ப்ரொமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது அந்த வகையில் ஜூம் மீட்டிங் வாயிலாக ஜோதிகா அளித்த பேட்டியில் கூறியதாவது:- இப்படத்தில் எனது கதாப்பாத்திரத்தை என் மாமியார் உள்ளிட்ட என் கணவரின் குடும்பத்தினரை மனதில் வைத்துக்கொண்டு நடித்தேன். இப்படத்தில் நடிப்பதற்கு பல ஆய்வு செய்து பயிற்சி மேற்கொண்டு நடித்தேன். கொரோனா ஊரடங்கு அதற்கு மிகவும் உதவியாக இருந்தது எனக்கு.
ஓடிடி வெளியீடு பற்றிய கேள்விக்கு பதில் கூறிய ஜோதிகா இது எனது 50-வது படம் திரையரங்குகளில் வெளியிடாமல் போவது எனக்கு மிகவும் வருத்தம். இருந்தாலும் இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்பது படம் ஆரம்பிக்கும்போதே எடுத்த முடிவு. கொரோனா ஊரடங்கு என்பதால் திரையரங்குகளில் திறக்க அதிக வாய்ப்பில்லை அப்படி திறந்தாலும் அந்த சூழ்நிலை எப்படி இருக்கும் என்பது தெரியாது அதனால்தான் ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு எடுத்தேம்.
சூர்யாவுடன் மீண்டும் எப்போது நடுப்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ஜோதிகா கண்டிப்பாக நல்ல கதைக்காக இருவரும் காத்திருக்கிறோம் அப்படி ஒன்று அமைந்தால் கண்டிப்பாக மீண்டும் இணைந்து நடிப்போம்.