Connect with us
 

News

மும்மையில் நாங்கள் செட்டில் ஆகவில்லை – சூர்யா !

Published

on

கங்குவா படத்தில் தற்போது நடித்து வருகிறார் சூர்யா இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி, நட்டி, பாபி தியோல் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என மொத்தமாக 10 மொழிகளில் உருவாகிறது.

இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களைச் சந்தித்த சூர்யா அவர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது மும்பையில் அவர் செட்டிலாகிவிட்டதாக கூறுகிறார்கள் அது உண்மையா என்று ரசிகர் ஒருவர் கேட்டார்.

இதற்கு பதிலளித்த சூர்யா தனது மகள் தியா, மகன் தேவ் இருவரும் மும்மையில் படித்து வருகிறார்கள். அவர்களை பார்க்க அடிக்கடி அங்கு சென்று வருகிறேன். மற்ற்படி நான் சென்னையில்தான் இருக்கிறேன். நான் மும்மையில் செட்டிலாகவில்லை என்று கூறினார்.