கன்னடத்தில் வெளியான முப்டி படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் இந்த பத்து தல தமிழுக்கு சில மாற்றங்களுடன் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு பரபரப்பான ஆக்ஷன் படத்தை கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் எந்த கட்சி ஆள வேண்டும் யார் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதை முடிவு செய்பவர் கன்னியாகுமரிசைச் சேர்ந்த பிரபல கொடூரமான தாதா சிலம்பரசன். படத்தின் ஆரம்பதிலேயே முதல்வர் சந்தோஷ் பிரதாப் அவர்களை கடத்துகிறார். அவரை கடத்தியது யார் என்ற விசாரணையில் இறங்குகிறது சிபிஜ. இதே சமயம் டெல்லியில் அடியாளாக இருக்கும் கவுதம் கார்த்திக் அங்கு நடந்து சண்டையில் போலீஸ் அதிகாரை நடுரோட்டில் சுட்டுக்கொள்கிறார். அதிலிருந்து தப்பிக்க கன்னியாகுமரியில் இருக்கும் சிம்புவிடன் செல்கிறார். ஆனால் கவுதம் கார்த்திக் ஒரு ரகசிய அன்டர்கவர் போலிஸ் அதிகாரி சிம்புவை கைது செய்ய இங்கு வந்துள்ளார். இறுதியில் சிம்புவை கைது செய்தாரா இல்லையா? சிம்புவின் பின்னணி என்ன? காணாமல் போன முதல்வர் கிடைத்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
சிம்பு பட முழுவதும் வராமல் இடைவேளைக்கு பின்னர் திரையில் வருகிறார். படத்தின் ஆரம்பத்திலிருந்து சிம்புவின் கை, கண், கால், தலை முடி என காட்டி சிம்புவின் ரசிகர்களின் கொண்டாட வைக்கிறார். இடைவேளைக்கு பின்னர் திரையில் முழுமையாக தோன்றும் சிம்பு அதன் பின்னர் திரைமுழுவதையும் தன் வசம் எடுத்துக்கொள்கிறார். சிம்பு உண்மையில் யார் என்ற பின்னணி நமக்கு தெரிய வரும் போது அவர் மேல் நல்ல அனுதாபம் வருகிறது அதை மிக அழகாக பதிவு செய்துள்ளார். அதற்காக காரணத்தையும் மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
அன்டர்கவர் போலீஸ் அதிகாரியாக அதிரடி காட்டும் கவுதம் கார்த்திக் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். இதுவரைக்கும் காதல் கதைகளில் வந்த கவுதம் கார்த்திக்கை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியிருக்கிறார். கண்டிப்பாக இதற்கு பின்னர் நல்ல அதிரடி படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.
பிரியா பவானி சங்கர் தாசில்தார் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். கவுதம் கார்த்திக் முன்னாள் காதலியாகவும் பிளாஷ்பாக் காட்சிகளில் அருமையாக வந்து செல்கிறார்.
படத்தின் மெயின் வில்லனாக மிரட்டும் கவுதம் மேனன். படத்தின் ஆரம்பம் முதல் முடிவரைக்கும் நரி தந்திரம் போட்டு மிரட்டுகிறார். சிம்புவே இப்படத்தில் மிகப்பெரிய கொடூரமான ரவுட என்ற காரணத்தால் என்னதான் கவுதம் மேனன் வில்லனாக இருந்தாலும் திரை முழுவதும் சிம்புவே தெரிகிறார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்துமே ரசிக்கும் விதம். அதிலும் குறிப்பாக ராவடி பாடல் குத்தாட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையில் படத்தின் தூக்கி நிறுத்தி வைக்கிறார்.
படத்தின் முதல் பாதி போன வேகமே தெரியவில்லை. ஆனால் இரண்டாம் பாதி சற்று தொய்ந்து செல்கிறது. அந்த முதல் பாதியில் இருந்து வேகம் காணம் போனது படம் கொஞ்சம் சலிர்ப்பு தட்டுகிறது. சிம்புவுக்காக படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மொத்தமாக மாற்றியது தேவையா என்ற கேள்வியும் வரத்தான் செய்கிறது. 100 ரவுடிகள் துப்பாக்கியுடன் வந்தாலும் ஒற்றை ஆளாக நின்று அவர்களை தும்சம் செய்வது இன்னும் எத்தனை வருடம்தான் தொடரப்போகிறதோ.
படம் முழுவதையும் தன் தலையில் தாங்கி பிடித்து வெற்றி பாதைக்கு அழைத்து செல்கிறார் சிம்பு. ஆனாலும் படம் முழுவதும் சிம்புவை காட்டி இருந்தால் இன்னும் தாங்கி ஒரு மிகப்பெரிய வெற்றி படமாக கொடுத்திருப்பார் ஏ.ஜி.ஆர்.
Pathu Thala Review By CineTime
[wp-review id=”45750″]