News
தொடர் கொலை குற்றவாளியை 14 நாட்களில் கண்டு பிடிக்கும் திரைப்படம் போர் தொழில் !
இயக்குநர் விகேஷ் ராஜா இயக்கத்தில் அஷோக் செல்வன், சரத்குமார் நிகிலா விமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் போர் தொழில். இப்படம் ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சரத்குமார் பேசியதாவது’ இப்படத்தில் மூத்த போலீஸ் அதிகாரியாக நானும் புதிதாக வேலைக்கு சேர்ந்த அதிகாரியாக அசோக் செல்வனும் நடித்திருக்கிறோம். இருவரும் இணைந்து அந்த நகரில் நடக்கும் தொடர் கொலைகளைச் செய்யும் கொலைகாரனை கண்டு பிடிப்பதுதான் படத்தின் மைக்கதை.
கொலையைக் கண்டுபிடிக்கும் விதம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் அதை எப்படி புலனாய்வு செய்து கண்டு பிடிக்க வேண்டும் என்பதை சொல்லிக்கொடுக்கும் கதாப்பாத்திரம் எனக்கு.
இது வரையில் சில படங்களில் நான் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும். இப்படத்தின் திரைக்கதை அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும் 14 நாட்களில் நடக்கும் சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவில்தான் படமாக்கப்பட்டன.
கண்டிப்பாக இப்படம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் இரு ஒரு க்ரைம் த்ரில்லர் படம். தற்போது இருக்கும் இளம் நடிகர்களுடன் அதிகமான படங்களில் நான் நடித்து வருகிறான். அப்படியென்றால் நான் இளம் நடிகர் இல்லையா என்று கேட்காதீர்கள் நானும் இளைஞன்தான் என்று கூறினார்.