News
பவர்ஸ்டார் சீனிவாசன் உடல்நிலை குறித்த வீடியோ வைராகி வருகிறது !

வனிதா விஜயகுமாருடன் சேர்ந்து பிக்கப் படத்தில் நடித்து வந்தார் பவர்ஸ்டார் சீனிவாசன். இந்நிலையில் அவருக்கு ரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டு மயங்கினார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.
ஒரு மாத காலமாக அவர் சிகிச்சை பெற்று வருகிறாராம். இந்நிலையில் மருத்துவமனையில் பவருக்கு சிகிச்சை அளிக்கும்போது எடுத்த வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
பவரை பார்த்தாலே சிரிப்பு வரும். ஆனால் இந்த வீடியோவில் அவரின் முகத்தை பார்த்தாலே பாவமாக இருக்கிறது. பவர் ஸ்டார் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
நடக்கக் கூட முடியாமல் பவர் வீக்காக இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. எப்பொழுதும் ஜாலியாக சிரித்துக் கொண்டும், மற்றவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் மனிதருக்கு இப்படி ஒரு நிலையா என ரசிகர்கள் கூறியுள்ளனர்.
முன்னதாக பவர்ஸ்டார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து அவரிடம் பேசியதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் வனிதா விஜயகுமார்.
நீ எப்பொழுதும் என் பக்கத்திலேயே இருந்தால் நான் நல்லா இருப்பேன்மா என்று பவர்ஸ்டார் தெரிவித்தார். ஆனால் அவரின் நிலைமை இந்த அளவுக்கு மோசமாகியிருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை.