Connect with us
 

English

பீஸ்ட் படத்தில் ராணுவ அதிகாரியாக நடிக்கும் தளபதி விஜய்?

Published

on

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. பின்னர் சென்னையில் வணிக வளாக அரங்கு அமைத்து முக்கிய காட்ச்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டன.

இந்த நிலையில் மீண்டும் ஜார்ஜியாவில் சில காட்சிகளை படமாக்க விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் செல்லவிருக்கிறார்கள். ஜார்ஜியாவில் காஷ்மீர் போன்று அரங்குகள் அமைத்து ராணுவம் தொடர்பான காட்சிகளை படமாக்கருப்பதாக தகவல் பரவி வருகிறது.

படத்தில் விஜய்யின் கதாப்பாத்திரத்தை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் பீஸ்ட் படத்தில் விஜய் ராணுவ அதிகாரியாக நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஆனாலும் இதனை படக்குழுவினர் இன்னும் உறுதி செய்யவில்லை. ஏற்கனவே விஜய் ராணுவ உளவு அதிகாரியாக நடிக்க துப்பாக்கி திரைப்படம் மிகப்பெரிய அளவில் பிரம்மாண வெற்றி பெற்றது.

பீஸ்ட் திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது.