News
தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரும் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் !

ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது தனது 170-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு வேட்டையன் என தலைப்பு வைக்கப்பட்டது. இப்படத்தை லைகா புரொடக்ஷன் தயாரிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்க மேலும் பகத் பாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சென்னை, தூத்துக்குடி போன்ற இடங்களில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ஆந்திராவில் உள்ள கடப்பாவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வேட்டையன் திரைப்படம் வருகிற தீபாவளி திருநாள் திரைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.