News
குடும்பத்துடன் அண்ணாத்த படம் பார்த்த ரஜினிகாந்த் !

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து தீபாவளி பண்டிக்கைக்கு திரையரங்குகளில் வெளிவரவிருக்கும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, ஜெகபதிபாபு என பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். இப்படத்தின் சரவெடி டிரைலர் நேற்று மாலை வெளியாகி இன்று வரை பல கோடி ரசிகர்கள் அதை பார்வையிட்டுள்ளனர்.
இந்நிலையில் தீபாவளி பண்டிக்கைக்கு வெளியாகும் அண்ணாத்த படத்தை என் பேரப்பிள்ளைகளுடன் பார்த்தேன் இன்று ரஜினிகாந்த் தனது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் புதிதாக உருவாக்கியுள்ள ஹூட் சமூகவலைத்தளத்தில் கூறியுள்ளார்.
இது பற்றி ரஜினிகாந்த் கூறியுள்ளதாவது :- அண்ணாத்த படத்தை என் குடும்பத்துடன் பார்த்தேன். குறிப்பாக என் பேரன் வேத், நான் நடித்த படத்தை முதல் முறையாக தியேட்டரில் பார்த்தான். வாழ்க்கையில் மறக்கவே மாட்டான் அவன். என் பக்கதிலேயே அமர்ந்து முழு படத்தையும் பார்த்தான்.
படம் பார்த்து முடித்ததும் நான்கு நிமிடம் என்னை கட்டிபிடித்துக்கொண்டு விடவே இல்லை தாத்தூ தாத்தூ ரொம்ப ஹேப்பி என கூறி சந்தோஷப்பட்டான். அவ்வளவு சந்தோசம் அவனுக்கு அவனை பார்த்து எனக்கும் மிகவும் சந்தோஷமாயிருச்சி என்று ரஜினி கூறினார்.