Connect with us
 

News

சூப்பர் ஸ்டார் விஜய்யுடன் இணைவது எனக்கு மகிழ்ச்சி – வெற்றிமாறன் !

Published

on

தமிழ் சினிமாவில் ஆடுகளம், பொல்லாதவன், வட சென்னை, அசுரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களின் பார்வையை தன் வசம் திருப்பிய ஒரு வெற்றி பட இயக்குநர்.

தற்போது சூரி நடிப்பில் விடுதலை என்ற படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். அதே சமயம் சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் தளபதி விஜய்யுடன் இணையவுள்ளார்.

தளபதி விஜய் 66-வது படத்தை தெலுங்கு பட இயக்குநர் வம்சி இயக்கவுள்ளார். இந்த நிலையில் தளபதி 67-வது படத்தை வெற்றிமாறன் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெற்றிமாறன் சூப்பர் ஸ்டார் விஜய் சாரோட படம் பண்றதுல சந்தோஷமா இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.