படத்தின் நாயகனான சிபிராஜுக்கு ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது இவரின் கட்டுப்பாட்டை இழந்து கைகள் தானாக செயல்படும் ஒரு நோய். கையில் ஸ்மைலி பால் வைத்திருந்தால் மட்டும் இவர் நன்றாக இருப்பார்.
சாப்ட்வேர் இஞ்சினியரான சிபிராஜுக்கு அவரது சிறு வயது தோழி நிகிலா விமலைக் காதலித்து திருமணமும் செய்து கொள்கிறார். பின்னர் தேன் நிலவுக்காக மணாலி செல்கிறார்கள். அங்கு இவர்கள் தங்கிய ஹோட்டல் அறையில் யாரோ ரகசிய கேமராக்களை வைத்து ஜோடிகளின் அந்தரங்கத்தைபடமெடுத்து பணம் சம்மாதிக்கும் கும்பளை கண்டு பிடிக்கிறார். இதை அறிந்து கொண்ட அந்த கும்பல்கள் சிபிராஜை விரட்ட ஆரம்பிக்கிறார்கள். அதிலிருந்து தப்பிக்க தன் மனைவி நிகிலா விமலையும் தன்னையும் காப்பாற்றினாரா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
நடிகர் சிபிராஜ் கபடதாரி என்ற ஒரு தரமான வெற்றி படத்திற்கு பின்னர் இப்படம் வெளியாகியுள்ளது. இவர் மனைவியை காப்பாற்றுவதற்காக ஓடுவது பின்னர் மனைவிக்காக தன் உயிரை கூட பொருட்படுத்தாமல் வில்லன்களை எதிர்த்து சண்டையிடுவது ரசிக்கும் படியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் ஆறு அடி உள்ள ஒரு ஹீரோ வில்லன்களை பார்த்து பயந்து ஓடுவதுதான் ஹீரோயிசமா என்றும் நினைக்க வைக்கிறது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வில்லன்களை எதிர்த்து நின்று சண்டையிட்டத்தை ஆரம்பத்திலேயே செய்து இருக்கலாம்.
சிபிராஜுக்கு நிகிலாவுக்கும் பெரிதாக நடிப்பதற்கு என்று காட்சிகள் இல்லை கணவன் – மனைவியாக இருந்தாலும் இவர்களின் நடிப்பு பெரிதாக ஒட்டாமல் உள்ள திரையில்.
மனாலியில் உறையும் குளிரில் படப்பிடிப்பை நடைத்தி முடித்தற்காக கண்டிப்பாக படக்குழுவினரை பாராட்டியே ஆக வேண்டும்.
Cinetimee
வில்லனாக வரும் ரஹேகா வார்த்தை என்றும் எதும் பெரிதாக வில்லை புலி மானை துரத்துவது போல துரத்துவது மட்டும்தான் வேலையாக இருந்தது படத்தில். காமெடிக்கு சதீஷ் எதுக்கு அவர் ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்து போகிறார்.
மனாலியில்தான் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளனர். உறையும் குளிரில் பல காட்சிகளில் எப்படி நடித்தார்கள் என்று சிந்திக்க வைக்கிறது. அதே போலா சில காட்சிகள் கிரீன் மேட்டில் எடுக்கப்பட்டது என்று நன்றாக தெரிகிறது.
நல்ல திரில்லர் படத்தை எடுத்த இயக்குநர் வினோத் டிஎஸ் அதற்கு சரியான திரைக்கதையும் எழுது இருந்தால் ஒரு தரமான திரைப்படமாக அமைந்திருக்கும்.
வித்தியாசமான கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வரும் சிபி சத்யராஜ் அவர்களுக்கு கண்டிப்பாக இது ஒரு முற்றிலும் மாறுபட்ட தேர்வுதான் தன்னால் முடிந்த வரை படத்தை காப்பாற்ற முடிவு செய்துள்ளார்.