Connect with us
 

Reviews

Don – Movie Review !

Published

on

றிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சூரி, சிவாங்கி, பால சரவணன், சமுத்திரக்கனி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் டான்.

Movie Details

படத்தின் ஆரம்பித்திலேயே கொட்டும் மழையில் காட்டுவழியில் காரில் வேகமாக அவசரமாக எங்கோ செல்கிறார் சிவகார்த்திகேயன் அப்படியே அவரின் பழைய நினைவுகள் படமாக ஓடுகிறது நினைவுகள்தான் படத்தின் ஒட்டுமொத்தக்கதையும்.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சமுத்திரக்கனியின் மகன் சிவகார்த்திகேயன். சிறு வயதிலிருந்தே மிகவும் கொடூரமான கண்டிப்பான அப்பாவா இருந்து வருகிறார் சமுத்திரக்கனி. பெரியவன் ஆனதும் ஆர்ஸ்ட் கல்லூரியில் சேர வேண்டும் என்று சிவகார்த்திகேயன் சொல்ல படித்தால் இஞ்சினியர்தான் படிக்க வேண்டும் என்று இஞ்னியர் கல்லூரியில் சேர்த்து விடுகிறார். படிப்பு கொஞ்சம் கூட ஏறாத சிவகார்த்திகேயன் தனக்குள் இருக்கும் திறமையை தேடுகிறார் அந்த தேடலில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் ஆசையும் கேட்ட பின்னர் உங்கள் ஆசையை சொல்லுங்கள் பெற்றோர்களே என்று இந்த படத்தின் மூலம் காட்டியுள்ளார் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி.

பெற்றோர்களின் ஆசைக்காக படிக்கும் மாணவர்கள் கல்லூரியில் மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் நிர்வாகம் என அதனால் அங்கு நடக்கும் மோதல் என அனைத்தும் வெளிப்படையாக இப்படத்தில் காணலாம்.

இன்றைய ரசிகர்களின் ரசனையை அறிந்து தன் படத்தின் கதைகளை தேர்வு செய்துள்ளார் சிவகார்த்திகேயன் இப்படத்தில் இதை தொடர்ந்து செய்தால் இந்த வெற்றி தொடரும்.

தன் திறமை என்ன என கண்டு அதைத்தான் தன் வாழ்க்கை லட்சியமாக அமைக்க வேண்டும் என்று போராடும் கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் மிக அழகாவும் சர்வ சாதாரணமாகவும் நடித்துள்ளார். இவரின் இந்த கதாப்பாத்திரம் இன்றைய பல இளைஞர்களில் நிஜ வாழ்க்கை என்பது நிதர்சனமான உண்மை. தங்களுக்கு பிடித்த படிப்பை படிக்காமல் தாய் தந்தைக்கு பிடித்த பிடித்ததே வாழ்க்கை என்று தங்களின் கனவுகளை அழித்து விட்டு பெற்றோர்களின் கனவுகளில் மூழ்கிவிடுகிறார்கள்.
Cinetimee

கல்லூரியில் மிரட்டும் டானாகவும் காதலிக்கு நல்ல காதலனாகவும் நண்பர்களுக்கு தில்லாகவும் அப்பாவுக்கும் மிகவும் பயந்து நடுங்கும் மகனாகவும் அனைத்து இடங்களிலும் ஸ்கோர் செய்து விட்டு செல்கிறார் சிவகார்த்திகேயன்.

ஹீரோயினாக வரும் பிரியா மோகன் இருவருக்கும் இடையில் பெரிதாக காதல் காட்சிகள் இல்லை. ஆனால் இவர்களின் பள்ளி பிளாஷ்பேக் கதையில் நடக்கும் அந்த பள்ளிக்காதல் பார்க்க மிகவும் அழகாவும் அருமையாகவும் இருந்தது.குறிப்பாக பள்ளி மாணவியாகவும் கல்லூரி மாணவியாகவும் க்யூட்டாக ரசிக்க வைக்கிறார் பிரியங்கா மோகன்.

கல்லூரி ஆசிரியராக வரும் எஸ்.ஜே.சூர்யா கல்லூரியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். மாநாடு படத்தில் கொடூரமான வில்லன் வேடத்தில் பார்த்து விட்டு இப்பிடி ஒரு கதாப்பாதிரத்தில் பார்க்கும் போது என்னமா மனுஷன் நடிக்கிறாரு பாரு என்று தோன்றுகிறது அதுதான் உண்மை.. வேற லெவல் நடிப்பு.

சிவகார்த்திகேயனின் நண்பர்களாக வரும் பாலசரவணன், ஆர்.ஜே.விஜய், ஷிவாங்கி சிரிக்க வைக்கிறார்கள் நம்மை. சிவகார்த்திகேயனின் அப்பாவாக வரும் சமுத்திரக்கனி ஒரு நடுத்தர அப்பாவாகவே இப்படத்தில் வாழ்ந்திருக்கிறார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் கன் கலங்க வைக்கும் இவரின் நடிப்பு. சிவகார்த்திகேயனின் அம்மாவாக வரும் ஆதிரா பாண்டிலட்சுமி மொட்டை மாடியில் சிவகார்த்திகேயனுக்கு பேசும் 10 நிமிட காட்சியில் நம் மனதில் நின்று விடுகிறார். நடிகராக மாறிய பின்னர் சிவகார்த்திகேயன் படத்தில் சூரி வேண்டும் என்று அடம் பிடித்து சூரிய இப்படத்தில் வைத்திருக்கிறார்கள் போல.

அனிருத் இசையில் பாடல்கள் தெறி மாஸ் பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது. கண்டிப்பக இப்படத்தை பார்க்கும் போது சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வரும் பிரகாஷ் ராஜ் கதாப்பாத்திரம்தான் சமுத்திரக்கனி நண்பன் படத்தில் வரும் சத்யராஜ் கதாப்பாத்திரத்தின் வேடம்தான் எஸ்.ஜே.சூர்யா.


மொத்தத்தில் டான் இன்றைய பல கல்லூரி மாணவர்களின் நிஜத்தை சொன்னதில் டன்.