News
சிம்புவுக்கு ஜோடியாக ரித்திகா சிங் !

நிஜ குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து பின்னர் ‘இறுதி சுற்று’ என்ற படத்தின் மூலம் நடிகையாக மாறியவர் ரித்திகா சிங். தமிழில் இவர் நடிப்பில் இறுதியாக 2020-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘ஓ மை கடவுளே’ இத்திரைப்படம்ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை பல திரை பிரபலங்கள் பாராட்டினர். அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தைன் மிகப்பெரிய வெற்றி தெலுங்கில் இதே படத்தை ரீமேக் செய்துள்ளார்.
இந்த நிலையில் சிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குநராக அஷ்வத் மாரிமுத்து ஒப்பந்தம் செய்ப்பட்டுள்ளார். தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வரும் சிம்பு அடுத்த பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களை முடித்து விட்டு அஷ்வத் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம்.
இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ள நிலையில். சிம்புவுக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.