News

விவாகரத்து அறிவிப்பு பதிவை நீக்கிய சமந்தா !

Published

on

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை சமந்தா.கடந்த 2017-ம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் பல படங்களில் நடித்து வந்தார். கடந்த வரும் இருவரும் மனம் ஒத்து பிரிவதாக சமூக வலைத்தளங்களில் ஒன்றாக அறிவித்தனர்.

சமீபத்தில் நாக சைதன்யா அளித்த பேட்டி ஒன்றில் எனக்கு ஏற்ற மிகச் சரியான ஜோடி சமந்தா என்று தெரிவித்திருந்தார்.

விவாகரத்து அறிவித்து பின்னர் நாக சைதன்யாவுடன் எடுத்துக்கொண்ட அனைத்து புகைப்படங்களாஇயும் இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கினார் சமந்தா.

தற்போது இவரின் விவாகரத்து அறிக்கை பதிவையும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார் சமந்தா. இதனால் பெரும் குழப்பத்தில் உள்ளனராம் ரசிகர்கள் இந்த ஜோடி மீண்டும் இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Trending

Exit mobile version