News
நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் சமுத்திரக்கனியின் வெள்ளை யானை !

தனுஷ் நடித்த திருடா திருடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுப்ரமணியம்சிவா அதன் பின்னர் பல வெற்றி படங்களை இயக்கிவிருந்தார். தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் மிக முக்கியமான ஒரு வேடத்திலும் நடித்திருந்தார். மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் இவர் இயக்கியுள்ள திரைப்படம் வெள்ளை யானை இப்படத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார்.
நடிகை சரண்யா ரவி கதாநாயகியாகவும் நகைச்சுவைக்கு யோகிபாபும் நடிக்க சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிடைந்து வெளியீட்டுக்கு தயாரான நிலையில்தான் கொரோனா இரண்டாம் அலை காரணமாக அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதை ஓடிடி-யில் வெளியிட படக்குழு முடிவு செய்தது. தற்போது அந்த முடிவையும் மாற்றி விட்டது. அதற்கு காரணம் முதல் சன் தொலைக்காட்சியில் இப்படத்தை வெளியிட்டுவிட்டு பின்னர் அதை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளதாம் படக்குழு.
இதற்கு முன்னதாக சமுத்திரக்கனி நடித்த ஏலே திரைப்படமும் யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படமும் இதே போலதான் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.