News
சார்பட்டா பரம்பரை திரைப்படம் தமிழ் சினிமாவின் மைல்கல் – லோகேஷ் கனகராஜ் !

பா.ரஞ்சித் இயக்கி தயாரித்து ஆர்யா நடித்து அமேஷான் ப்ரைம் ஓடிடி தளத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. 1970-களில் சென்னையில் பிரபலமான விளையாட்டாக இருந்த குத்துச்சண்டையை மையப்படுத்தி வெளியானது.
வெளியான நாள் முதல் விமர்சன அளவில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் அந்த காலத்து சூழலை மிக அழகாக படம் பிடித்து பதிவு செய்திருந்தார் இயக்குநர் ரஞ்சித். ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல அனைத்து தரப்பிலும் நல்ல பாராட்டை பெற்று வருகிறது.
இப்படத்தை பார்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவுட்டுள்ள பதிவில்:- ஒரு விளையாட்டு பொழுபோக்கை மையப்படுத்தி வந்த பல படங்களில் இந்த திரைப்படம் ஒரு மைல்கல். இந்த மாதிரி ஒரு சிறந்த படத்தை கொடுத்த பா.ரஞ்சித் அண்ணா மற்றும் ஆர்யா உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.