News
ஓடிடி தளத்தில் வெளியாகும் செல்வராகனின் சாணிக்காதிதம்?

தனுஷ், சூர்யா என பல நடிகர்களின் திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வரும் நிலையில் இயக்குநர் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள சாணிக்காதிதம் என்ற திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியாகவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படம் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அமேசான் தரப்பே விரைவில் அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் முடிவடைந்தது. அனைத்து பணிகளும் முடிவடைந்து தயாராக இருந்தாலும் இப்படத்தை அமேசான் ஓடிடி தளத்தில் இன்னும் மூன்று மாதங்கள் கழித்து வெளியிட இருக்கிறதாம் படக்குழு.