Connect with us
 

News

ஆல்பம் பாடலுக்காக ஜோடி சேரும் சாந்தனு – மஹிமா நம்பியார் !

Published

on

தமிழ் சினிமாவில் படங்களில் வரும் பாடல்களை விட ஆல்பம் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அதற்கு உதாரணமாக குக் வித் கோமாளி அஸ்வின் நடித்த குட்டி பட்டாஸ், அடிபொலி பாடல்களை சொல்லலாம் அவை அனைத்துமே பல மில்லியன்ஸ் கணக்கான பார்வையாளர்களை கடந்து இன்று பலரின் பிடித்தமான ஆல்பம் பாடலாக உள்ளது.

அந்த வரிசையில் தற்போது சாந்தனு – மஹிமா நம்பியார் இருவரும் இணைந்து குண்டுமல்லி என்கிற ஒரு வீடியோ ஆல்பத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.

நடிகர் ஆதவ் கண்ணன் இந்த ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார். ஜெரார்டு பெய்க்ஸ் என்பவர் இந்த ஆல்பம் பாடலுக்கு இசையமைத்துள்ளார். பொதுவாக கல்யாணத்துக்காக பெண் பார்த்து விட்டு அந்த பெண்ணை பிடித்திருந்தால் மல்லிகை பூவை வைத்து விட்டு செல்வது தமிழர்களின் ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. அப்படி பூ வைக்கிற விழாவின் பின்னணியில் இந்த பாடலை உருவாக்கியுள்ளோன் என்கிறார் இயக்குநர் ஆதவ் கண்ணன்.