News
சிவகார்த்திகேயன் குடும்பத்தில் இணைந்து புது குட்டி உறவு !
நடிகர் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. அதன் பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
சிவகார்த்திகேயன் – ஆர்த்தி இருவருக்கும் ஒரு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இவர் மூன்றாவது முறையாக கர்ப்பமானார் இந்த தகவலை யாருக்கும் தெரிவிக்காமல் இருந்து வந்தார் சிவகார்த்திகேயன் இதற்கு இடையில் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக பல முன்னணி பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் இருக்கும் சிலர் பொய்யான வதந்திதகளை பரப்பி வந்தனர். ஆனால் சில வாரங்களுக்கு முன்னர் குடும்ப நிகச்சி ஒன்றில் கலந்து கொண்டார் ஆர்த்தி அதில் அவர் கர்ப்பமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் தன் எக்ஸ் பக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் ‘நேற்று எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதை மிகவும் மகிழ்ச்சியோடு தெரிவுக்கொள்கிறேன். ஆர்த்தியும் குழந்தையும் நலமாக இருக்கிறனர். ஆராதனாவிற்கும் குகனுக்கும் நீங்கள் கொடுத்த அன்பையும் ஆசியையும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கு தரவேண்டும் என்று அந்த பதிவில் பதிவிட்டுள்ளார்.