News
மிக்ஜம் நிவாரண பாதிப்புக்காக ரூ.10 லட்சம் நிதி வழங்கிய சிவகார்த்திகேயன் !

கடந்த வாரம் சென்னையில் ஏற்பட்ட மிக்ஜம் பாதிப்பு நிவாரணப் பணிகளுக்காக ரூ.10 லட்சம் காசோலையை அமைச்சர் உதயநிதியிடம் வழங்கினார் சிவகார்த்திகேயன்.
இது தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளத்தில் உதயநிதி பதிவிட்டுள்ள பதிவில் மிக்ஜம் புயல் மற்றும் கனமழையத் தொடர்ந்து கழக அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது.
நம் அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்கிற விதமாக பல நிறுவனங்கள், இயக்கங்கள், தனி நபர்கள் என பலரும் முதலமைச்சரின் போது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர்.
அந்த வகையில் நம்மை சந்தித்து நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் போது நிராவண நிதிக்காக நம்மிடம் வழங்கினார்.அவருக்கு அன்பும் நன்றியும் ஒன்றிணைந்து செயல்படுவோம். இயற்கைப் போரிடரால் ஏற்பட்ட துயர் துடைப்போம் என பதிவிட்டுள்ளார்.