Connect with us
 

News

கமல் – எச்.வினோத் கூட்டணிக்கு ப்ரேக் !

Published

on

விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் கமல். இப்படத்தை தொடர்ந்து பிரபாஸின் கல்கி 2898 படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கும் படத்தில் முதலில் நடிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் கல்கி படத்தில் நடிக்கவுள்ளாராம். அதன் பின்னர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதால் பிரச்சாரத்தில் ஈடு படவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இவை எல்லாம் முடித்து விட்டு எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க 2025-ம் ஆண்டு ஆகிவிடும் எனவும் கூறப்படுகிறது.

இதனால் இயக்குநர் வினோத் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இரண்டாம் பாகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மிக விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.