Connect with us
 

News

ஒரே நாளில் ரூபாய் 8 கோடி வசூல் செய்த சிவகார்த்திகேயனின் டாக்டர் !

Published

on

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன், வினய் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் டாக்டர். இப்படத்தை கே.ஜே.ஆர் நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே தயாரிப்பு நிறுவனன்மும் இணைந்து தயாரித்துள்ளது.

நேற்று திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ஒரே நாளில் தமிழகத்தில் மட்டும் சுமார் 8 கோடு ரூபாய் வசூல் செய்திருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்திற்கு பின்னர் கொரோனா காலத்தில் வெளியான திரைப்படங்களில் வசூலில் டாக்டர் திரைப்படம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

டாக்டர் திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று உள்ளது இந்த நிலையில் இந்த படத்தின் நேற்றைய தமிழக வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

சென்னை 64 லட்சம்
செங்கல்பட்டு 1.90 கோடி
வட மற்றும் தென் ஆற்காடு 97 லட்சம்
கோவை 1.28 கோடி
மதுரை ராமநாதபுரம் 90 லட்சம்
திருச்சி தஞ்சாவூர் 66 லட்சம்
சேலம் 68 லட்சம்
திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி 42 லட்சம்

மொத்தம் 7.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.