News
இரவில் மட்டுமே நடந்து வரும் சூர்யா 42 படப்பிடிப்பு !

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்ப்பில் தனது 42 படத்தை நடித்து வருகிறார். இதில் சூர்யாவுடன் திஷா பதானி, யோகி பாபு, ரெடிங் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் அடுத்தக்கட்ட படிப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. பெரும்பாலும் படப்பிடிப்பு இரவில் மட்டுமே நடந்து வருகிறதாம். படப்பிடிப்பில் ஸ்டண்ட் இயக்குநர் சுப்ரீம் சுந்த ரியக்கத்தில் அதிரடி சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் சண்டைக்காட்சிகள் தமிழ் சினிமாவில் கண்டிப்பாக பேசப்படும் என்றும் மொத்தமாக 13 வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் சூர்யாவுக்கு இப்படம் ஒரு மைல் கல்லாக அமையும் என்கிறது சினிமா வட்டாரம்.