Connect with us
 

News

காஷ்மீரில் நடந்து வரும் தளபதி 67 படப்பிடிப்பு !

Published

on

மாஸ்டர் பட பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் இணையும் திரைப்படம் தளபதி 67. அதிரடியான ஆக்‌ஷன் கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தில் முக்கிய வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிப்படு உறுதியாகியுள்ளது.

இது குறித்து லோகேஷ் கனகராஜ் கூறுகையில் விஜய் 67 படத்தில் சஞ்சத் தத் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளார். அதோடு படத்தில் இடம்பெற்றுள்ள வில்லன் வேடத்திற்கு சஞ்சத் தத்தால் மட்டுமே சிறப்பாக நடிக்க முடியும் அந்த அளவுக்கு பலவர் புல்லான வில்லன் கதாப்பாத்திரம் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான கேஜிஎப் 2 படத்தில் சஞ்சய் தத் ஆதீரா என்ற வேடத்தில் மிரட்டி இருப்பார். அந்த வேடத்துக்கு இணையாக விஜய் 67 படத்திலும் சஞ்சய் தத்தின் வேடம் இருக்கும். மேலும் விஜய் 67 படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. அங்கு முக்கியமான சண்டைக்காட்சிகளை படமாக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.