News
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் !

சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார் சூர்யா. அனைத்து வெளியீட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து சுதா கொங்காரா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 43வது திரைப்படம்.
இந்த நிலையில் சூர்யா நடிக்கும் 44வது படத்தை இயக்குனர்4கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். இப்படத்தை சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ளார். இவர்கள் முதல் முதலாக இணைவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதன் அதிகாரபூர்வ அறிவிப்பை போஸ்டர் மூலம் அறிவித்தார் சூர்யா. அந்த போஸ்டரில் மரங்கள் பின்னணியில் கார் ஒன்று பற்றி எரிவது போன்று உள்ளது. மேலும் அந்த போஸ்டரில் Love Laughter War என குறிப்பிட்டது.