News
ஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

மினி ஸ்டூடியோ மற்றும் சிக்ஸர் என்டர்டைன்மென்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் படம் பிளான் பி. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த வருடம் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் விஜய்சேதுபதி அவர்களால் வெளியிடப்பட்டது.
பின்னர் பிளான் பி என்ற பெயரை மாற்றி திட்டம் இரண்டு என்று அறிவித்தது படக்குழு. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் விக்னேஷ் கார்த்திக் இயக்க இசையமைத்திருக்கிரார் சதீஷ் ரகுநாதன். ஒளிப்பதிவு கோகுல் பினாய், படத்தொகுப்பு பிரேம்குமார்.
சஸ்பென்ஸ் மற்றும் திகில் கலந்து உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர் பார்ப்பு உள்ளது. இந்த நிலையில்தான் இப்படம் நேரடியாக சோனி லை ஓடி தளத்தில் இம்மாதம் 30-ம் தேதி வெளியாகவுள்ளாதக படக்குழு அறிவித்துள்ளது.