Connect with us
 

News

நடிகை மகிமா நம்பியாருக்கு கிடைத்த சர்வதேச விருது !

Published

on

கடந்த 2019-ம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் மகாமுனி. இதில் மகிமா நம்பியார் மிக முக்கியமான கதாபாதிரத்தில் நடித்துதிருந்தார். அவரது நடிப்புக்கு வெகுவான பாராட்டு கிடைத்தது. மகாமுனி திரைப்படம் ஸ்பெயினில் நடந்த மேறிக் சர்வதேச திரைப்பட விழாவில் 5 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த நிலையில் மேட்ரிக் பட விழாவில் மகிமா நம்பியாருக்கு சிறந்த துணை நடிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மகுமா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்:-

மகாமுனி படத்தில் நடித்ததற்காக மேட்ரிக் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சந்தோஷயை சொல்ல வார்த்தைகளே வரவில்லை. படத்தின் இயக்குநர் சாந்தகுமாருக்கு நன்றி என கூறியுள்ளார்.

தற்போது மகிமா நம்பியார் ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடித்துள்ள ஐங்கரன் திரைப்படம் திரைக்கு வர தயாராகவுள்ளது. தற்போது அருண் விஜய்யுடன் ஓ மை டாக் படத்திலும் கிருஷ்ணாவுடன் பெல்பாட்டம் படங்களிலும் நடித்து முடித்துள்ளார்.

தற்போது பா.விஜய் இயக்கத்தில் பிரபு தேவாவுடன் ஒரு படத்திலும் மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.