News
சூர்யா 40 படத்தின் பர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு கொண்டாடத்தில் ரசிகர்கள் !

சூரரை போற்று படத்தின் வெற்றிக்கு பின்னர் சூர்யா தனது 40-வது படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். கொரோனா இரண்டாம் அலை காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டு இந்த மாதம் மறுபடியும் ஆரம்பமானது.
சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியா மோகன் இவர்களுடன் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணான், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யா பிறந்தநாள் பரிசாக வெளியிடப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை தயாரிப்பு நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளாது. அதன் படி வருகிறது 22-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.