News
நவம்பரில் முடிவடையும் பீஸ்ட் படப்பிடிப்பு பொங்களுக்கு வெளியீடு !

மாஸ்டர் படத்திற்கு பின்னர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இது தளபதியின் 65-வது திரைப்படமாகும். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ஜார்ஜியாவில் முடித்துவிட்டு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை பூந்தமல்லி அருகே உள்ள ஸ்டுடியோவில் நடத்தி வருகிறார்கள்.
இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறவுள்ளது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவர்களுடன் யோகிபாபு, வி.டி.வி கணேஷ், அபர்ணா தாஸ், ஷைன் சாக்கோ நடித்து வருகிறார்கள்.
இது நாள் வரை திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் பீஸ்ட் திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளனர். அதே போல வலிமை திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படம் நவம்பர் மாதம் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து 2022 பொங்கள் பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.