Connect with us
 

News

4 நாட்களில் ரூ.400 கோடி வசூல் செய்த லியோ !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் லியோ உலக அளவில் ரூ.400 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் லியோ திரைப்படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148.5 கோடி வசூல் செய்தது. தொடர்ந்து அரசு விடுமுறை உள்ளதால் படத்தின் வசூல் அதிகரித்து வருகிறது.

அதன் படி வெளியாகி 4 நாட்களில் உலக அளவில் ரூ.400 கோடியை தாண்டி விட்டதாக தெரிவித்துள்ளது. சுமார் 250 – 350 கோடி பட்ஜெட்டில் உருவான லியோ திரைப்படம் தற்போது லாபத்தை ஈட்டியுள்ளது. மேலும் இப்படம் ரஜினியின் ஜெயிலர் படத்தின் ஒட்டுமொத்த வசூலான 600 கோடியை முடியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.