News
வாரிசு படத்தின் தீ தளபதி பாடல் வெளியானது !

இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. விஜய்க்கு ஜோடியாக முதல் முறையாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இசையமைப்பாளர் எஸ்.தமன் இசையமைத்துள்ள இப்படம் அடுத்த வருடம் பொங்கள் பண்டிகைக்கு திரைக்கு வரவுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாரிசு முதல் பாடல் விஜய் குரலில் ரஞ்சிதமே சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி சுமார் 80 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள நிலையில் இன்று நடிகர் சிலம்பரசன் பாடி நடித்துள்ள இரண்டாவது பாடலான தீ தளபது என்ற பாடல் வெளியாகியுள்ளது.