Connect with us
 

News

தள்ளி தள்ளி போகும் அதர்வானின் தள்ளிப் போகாதே வெளியீடு !

Published

on

இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தள்ளி போகாதே. இப்படத்தில் அதர்வா மற்றும் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். ரொமான்ஸ் காதலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.

இப்படம் கடந்த அக்டோபர் மாதம் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் அது தள்ளி வைக்கப்பட்டு டிசம்பர் 3-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த வெளியீடும் தற்போது தள்ளி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. காரணம் இப்படத்தின் வியாபாரம் இன்னுமே நடக்காததே காரணம் என்கிறது கோலிவுட் வட்டாரம். தள்ளிப்போகாதே என்ற பெயர் வைத்ததும் வைத்தார்கள் படம் தள்ளி போய்கொண்டே இருக்கிறது.