Connect with us
 

News

ஆகாஷ் முரளி – அதிதி சங்கர் நடிக்கும் நேசிப்பாயா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !

Published

on

XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் நேசிப்பாயா படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் லான்ச் விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய இப்படத்தின் தயாரிப்பாளர் ேவியர் பிரிட்டோ பேசியதாவது, “பிஸி ஷெட்யூலில் நேரம் ஒதுக்கி வந்த நயன்தாரா மேம்க்கு நன்றி. ஆர்யா சாருக்கும் நன்றி. எங்கள் குடும்பத்திற்கே எமோஷனலான நாள் இது. ‘மாஸ்டர்’ படம் தயாரிக்கும்போது நிறைய சவால்கள் இருந்தது. ஆனால், விஜய் சார் கரியரில் அது சிறந்த படம் எனும்போது நாங்கள் பட்ட கஷ்டமெல்லாம் ஒன்றும் இல்லை என்று நினைத்தோம். அதற்கடுத்த பெரிய படம் என்னுடைய மருமகன் ஆகாஷூக்கு அமையும் என்று நினைக்கவில்லை. என் மகள் சிநேகா, ஆகாஷை விரும்புகிறேன் என்று சொன்னதும் நாங்கள் எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சவால்களை வாய்ப்பாக மாற்றி கடின உழைப்பை நாம் விரும்பும் ஒன்றுக்கு தர வேண்டும். நடிப்பில் அதெல்லாம் தாக்குப் பிடிப்பீர்களா என்று ஆகாஷிடம் கேட்டேன். அந்த நம்பிக்கை ஆகாஷிடம் இருந்தது. ஆகாஷை பெரிய அளவில் அறிமுகம் செய்ய வேண்டும், அவரிடம் இருக்கும் ப்ளஸை திரையில் சரியாக கொண்டு வர வேண்டும். இதற்கெல்லாம் சரியான இயக்குநர் விஷ்ணு வர்தன் தான் என என்னுடைய மகள் முடிவெடுத்து மும்பை போய் அவரைப் பார்த்து பேசி சம்மதிக்க வைத்தாள். விஷ்ணு வர்தனும் கதையை சிறப்பாக செய்து கொடுத்துள்ளார். அதிதியும் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். யுவன் இசையில் பாடல்கள் நன்றாக வந்துள்ளது. தொழில்நுட்ப குழுவினர் சிறந்த பணி கொடுத்துள்ளனர். படம் நன்றாக வர வாழ்த்துக்கள்”.

இதில் கலந்து கொண்டு பேசிய  இப்படத்தின் ஹீரோ ஆகாஷ் முரளி  “இந்த விழாவிற்காக நேரம் எடுத்து என்னை அறிமுகப்படுத்திய நயன்தாரா மேம்க்கு நன்றி. என்னுடைய தயாரிப்பாளர் பிரிட்டோ சார், சினேகாவுக்கு நன்றி. என்னுடைய கோ-ஸ்டார் அதிதிக்கு நன்றி. நடிக்க ஆரம்பித்த புதிதில் நடுக்கமாக இருந்தது. அவர்தான் என்னை கூல் செய்தார். இயக்குநர் விஷ்ணு வர்தன் சார், அனு வர்தன் மேம், தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றி. யுவன் சார் இசையில் நடித்திருப்பது மகிழ்ச்சி. அம்மா, அண்ணன் வந்திருக்கிறார்கள். அண்ணாவிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். எல்லோருக்கும் நன்றி”.

இதில் கலந்து கொண்டு பெய்ய அதிதி சங்கர் முதலில் என்னுடைய தயாரிப்பாளர்கள் சேவியர் சார், சிநேகாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஷ்ணு சாருக்கு நன்றி. என்னுடைய முதல் காதல் கதை இது. எல்லோருக்கும் பிடிக்கும். ஆகாஷூக்கு முதல் படம். சிறப்பாக செய்திருக்கிறார். முரளி சார், அதர்வா சார் மற்றும் எனக்கு கொடுத்த அன்பும் ஆதரவும் ஆகாஷூக்கும் கொடுங்கள். இந்த இண்டஸ்ட்ரியில் எனக்கு மிகவும் பிடித்த நயன் மேம் மற்றும் ஆர்யா சார் இருவரும் இந்த நிகழ்வை சிறப்பித்துக் கொடுத்ததற்கு நன்றி”.