Connect with us
 

News

நடன இயக்குநர் பிருந்தா கோபால் இயக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது !

Published

on

பிரபல நடன இயக்குநர் Brindha Gopal இவர் இயக்கு நராக அறிமுகமான திரைப்படம் ‘ஹே சினாமிகா’ இப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இப்படத்தை தொடர்ந்து தற்போது Brindha Gopal ஆக்‌ஷன் திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார் இப்படத்திற்கு ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ என்று பெயர் வைத்துள்ளனர்.

இப்படத்தில் ஹரிது ஹருண், ஆர்.கே.சுரேஷ், பாபி சிம்ஹா, முனீஸ்காந்த், அனஸ்வரராஜன் என பலர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்ப்பில் ரியா ஷிபு இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் நிறைவடைந்து தற்போத் வெளியீட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் கதாப்பாத்திரங்களில் அறிமுக வீடியோ வெளியானது. மிக விரைவில் இப்படத்தின் டீஸர் வெளியாகவுள்ளது. இப்படம் நவம்பம் மாதம் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.