News
என் வாழ்க்கையை உயர்த்திய படம் காக்கா முட்டை !

கடந்த 2015-ம் ஆண்டு நடிகர் தனுஷ் இயக்குனர் வெற்றி மாறன் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் காக்க முட்டை. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு பலராலும் பெரிதும் பாராட்டப்பட்டு இரண்டு தேசிய விருதுகளாஇயும் வென்றது.
இந்நிலையில் கடந்த 5-ம் தேதியுடன் இப்படம் வெளியாகி ஆறு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இப்படம் குறித்து நடிகை ஐஸ்வர்யா தனது டுவிட்டர் பதிவில் கூறியிதாவது:-
காலம் எவ்வளவு வேகமாக பறந்து ஓடுகிறது சரியாக இந்த அதாவாது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காக்கா முட்டை திரைப்படம் வெளியானது. என் இதயத்தில் மிக நெருக்கமாக இருக்கும் ஒரு மைல்கல் படம். இது பல தடைகளை உடைத்து என் வாழ்க்கையை உயர்த்தியது.
இப்படத்தை கொடுத்த இயக்குநர் மணிகண்டன் தயாரிப்பாளர் தனுஷ், வெற்றிமாறன் ஆகியோருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி என்று பதிவிட்டிருந்தார்.