News

விஜய் மற்றும் அஜித் இருவரால்தான் தமிழ் சினிமா தரம் குறைகிறது – அருண்பாண்டியன் !

Published

on

பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் நடித்திருக்கும் புதிய திரைப்படம் ஆதார். இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அருண்பாண்டியன் பேசியது தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில் பேசிய அருண்பாண்டியன் :- விஜய் மற்றும் அஜித் ஆகீயோரால் மட்டுமே தமிழ் சினிமாவின் தரம் குறைகிறது என்று கூறியுள்ளார்.

விஜய் மற்றும் அஜித் படங்களின் பட்ஜெட்டில் 90 சதவீதம் அவர்களுடைய சம்பளத்திற்கே சென்று விடுகிறது. மீதி பணத்தை வைத்துதான் படத்தை எடுக்கவேண்டும். இதனால்தான் படம் தரமற்றதாக உருவாகிறது என்று கூறினார்.

அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களால்தான் தமிழ் சினிமா பின்தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அருண்பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த பேச்சு தற்போது தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version