Connect with us
 

News

தனுஷ் இயக்கும் ராயன் பட படப்பிடிப்பு ஏப்ரலில் ஆரம்பம் !

Published

on

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதை தவிர இருக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை முடித்தவுடன் தனுஷ் மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளாராம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அப்படத்திற்கு ராயன் என தலைப்பு வைத்துள்ளதாகவும் வடசென்னையை மையமாக வைத்து ஆக்‌ஷன் திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளதாகவும் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் நடிகை துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராமன், விஷ்ணு விஷால், எஸ்,ஜே,சூர்யா ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.