Connect with us
 

News

உலக அளவில் வசூலில் துணிவை தட்டி தூக்கி முதலிடம் பிடித்த வாரிசு !

Published

on

இரண்டு தினங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவே எதிர்பார்த்து காத்திருந்த இரண்டு உச்ச நடிகர்களின் படமான வாரிசு மற்றும் துணிவு திரையரங்குகளில் வெளியானது.

இதில் துணிவு வங்கி கொள்ளையை மையமாகவும் வாரிசு குடும்ப உறவுகள் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை வைத்தும் எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

வெளியான இந்த இரு திரைப்படங்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் 2 நாட்களில் உலகமெங்கும் ரூ.80 கோடி வசூலை வாரிசு திரைப்படமும் அதே இரண்டு நாளில் ரூ.65 கோடி வசூலை துணிவும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பொங்கள் விடுமுறை என்பதால் அடுத்த 4 நாட்களுக்கு நல்ல வசூல் கிடைக்க வாய்ப்புள்ளது.