Connect with us
 

News

மீண்டும் தன் பைக் பயணத்தை ஆரம்பித்த அஜித் குமார் !

Published

on

அஜித் குமார் ஒரு நடிகராக இருந்தாலும் பைக் பயணம் செய்வதில் மிக ஆர்வம் கொண்டவர். இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு பைக்கில் பயணம் செய்து சுற்றி வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் பைக் பயணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார். தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து சென்னை திரும்பியுள்ள அஜித் குமார் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு தற்போது தயாராகி வருகிறார்.

இந்த நிலையில் அண்மையில் காது பக்கத்தில் ஏற்பட்ட லேசான வீக்கத்தின் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். சிகிச்சை முடிவடைந்து வீடு திரும்பிய அஜித் குமார் மறு நாளே குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தற்போது மீண்டும் தன் பைக் பயணத்தை ஆரம்பிதுள்ளார். இந்த முறை வட இந்தியாவில் பைக் பயணத்தை தொடங்கியுள்ளார். பயணத்தின் போது ஓய்வு எடுத்துக்கொள்ளும் நேரத்தில் காட்டு பகுதியில் நண்பர்களுடன் சமைத்து சாப்பிடும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விடாமுயற்சி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்க தாமதம் ஏற்பட்டு உள்ளதாம் அதனால் அஜித் குமார் மீண்டும் தன் பைக் பயணத்தை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.