Connect with us
 

News

ரஜினி வாழ்க்கை வரலாற்றிலும் நடிக்க ஆசை – தனுஷ் !

Published

on

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் படத்தின் அறிமுக விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தனுஷ்

“எண்ணம் போல வாழ்க்கை என்பதை நான் நம்புகிறேன். அதையே அடிக்கடி சொல்வேன். நம்மில் பலர் இரவில் தூக்கம் இல்லை என்றால் இளையராஜா அவர்களின் பாடலை கேட்டுத்தான் மெய் மறந்து தூங்குவாம். ஆனால் நான் இளையராஜாவாக நடித்தால் எப்படி இருக்கும் என நினைத்து பார்த்து பல இரவுகள் தூங்காமால் இருந்திருக்கிறேன்.

நான் இருவரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஒன்று இளையராஜா இன்னொன்று ரஜினிகாந்த். அதில் ஒன்று நடந்து விட்டது. நான் இந்த இடத்துக்கு வர முடிந்தது இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததை எல்லாவற்றையும் மிகப்பெரிய கர்வத்தை கொடுக்கிறது.

நான் இளையராஜாவின் பக்தன் அவரின் இசைதான் எனக்குத் துணை. இது எல்லோருக்கும் பொருந்தும். என் நடிப்பு ஆசானும் அவர்தான் எனக்கு நடிப்பு என்றால் என்வென்று தெரியாத காலத்திலிருந்து இன்று வரை ஒரு காட்சியை படமாக்குவதற்கு முன் அந்த காட்சிக்கு தகுந்த மனநிலையில் இருக்கும் இளையராஜாவின் பாடல் இல்லை பிஜிஎம் கேட்பேன்.

இப்போது நடந்து வரும் போது கூட இளையராஜாவிடம் நீங்கள் முன்னாடி போங்க உங்கள பின்தொடர்ந்து நான் வருகிறேன் என்று சொன்னேன் அதற்கு நான் என்ன உனக்கு கைடா என கேட்டார். ஆம் நீங்கள் தான் வழிநடத்தி வருகிறீர்கள். விடுதலை படத்தின் பாடல் பதிவின் போது இளையராகாவிடம் நீங்கள் இங்கேயே இருப்பீங்களா என கேட்பேன். நான் எப்போ உன் கூட இல்ல என கேட்டார் உண்மைதான்.

ஒரு கலைஞனாக இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன். இந்த அழைப்பு இளையராஜாவிடமிருந்து வந்தது கூடுதல் மகிழ்ச்சி. இசையின் கடவுளாக நடிக்கும் வாய்ப்பை நினைத்து நெகிழ்கிறேன் என்றான்.