Connect with us
 

News

நலமுடன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் அஜித் குமார் !

Published

on

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இரு தினங்களுக்கு முன்னதாக அஜித் குமாருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

காதுக்கு அருகில் உள்ள மூளைக்கு செல்லும் நரம்பில் சிறிய வீக்கம் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இந்த வீக்கத்தை அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிகிச்சை முடிவடைந்து நேற்று நார்மால் வார்டுக்கு மாற்றப்பட்ட அஜித் அவர்கள் இன்று அதிகாலை வீடு திரும்பினார்.

அறுவை சிகிச்சை நன்றாக முடிவடைந்து அஜித் நலமுடன் இருப்பதாகவும் வருகிற 15ம் தேதி விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித் குமார் மீண்டும் கலந்து கொள்வார் என்றும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.