Connect with us
 

News

13 வருடங்களுக்கு பின்னர் அஜித் படத்தில் பாவானா !

Published

on

துணிவு படத்தை தொடர்ந்து இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. அஜித்துடன் இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் அஜர்பையான் நாட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தில் மலையாள நடிகை பாவானவும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது சம்பந்தமாக வெளியான வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அஜித் சில நபர்களுடன் பேசிக்கொண்டிருப்பது போன்றும் அந்த சமயத்தில் பாவனா வர அவரிடம் அஜித் கொஞ்சம் தாமதம் ஆகி விட்டது மன்னித்து விடுங்கள் என சொல்கிறார். அப்போது பாவானா நீங்கள் லேட்டாக வருவீர்கள் என சொன்னதால் நானும் லேட்டாகத்தான் வந்தேன் என கூறுகிறார்.

இதற்கு முன்னதாக பாவானா அஜித் இருவரும் இணைந்து 2010-ம் வருடம் வெளியான அசல் படத்தில் நடித்திருந்தனர் அதன் பின்னர் சுமார் 13 வருடங்களுக்கு பின்னர். மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர்.