Teaser
சொர்கவாசல் மிரட்டலான டீசர் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது !

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சொர்கவாசல் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஒரு காமெடி நடிகராக சினிமாவில் அறிமுகமான ஆர்.ஜே.பாலாஜி அதன் பின்னர் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார்.நயன்தாராவை வைத்து இயக்கிய மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய வெற்றியை இவருக்கு கொடுத்தது. இதனை தொடர்ந்து சூர்யா நடிக்கும் 45-வது படத்தை இயக்கவுள்ளார்.
இந்த நிலையில் அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் சொர்கவாசல் படத்தில் தற்போது நடித்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. 1999-ம் நடந்த உண்மை சம்பவத்தை நடிப்படையாக கொண்ட திரைப்படம் இது. முழுக்க முழுக்க சிறைச்சாலையை வைத்து இப்படம் உருவாகி வருகிறது.