தீராக் காதல் இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஜெய், ஜஸ்வர்யா ராஜேஷ் ஷிவாதா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்.
ஜெய் ஷிவதாவை திருமணம் செய்து 6 வயதில் ஒரு பெண் குழந்தை ஒன்று உள்ளது. ஆபீஸ் வேலையாக மங்களூர் செல்கிறார் ஜெய் அங்கு ஜஸ்வர்யா ராஷேஜை சந்திக்கிறார். இவர்கள் இருவரும் கல்லூரி படிக்கும் போது காதலித்து பிரிந்து விடுகிறார்கள். அதிலிருந்து 8 வருடம் கழித்து இன்று சந்திக்கிறார்கள்.
அப்படி சந்தித்து கொள்ளும் இவர்கள் சில நாட்கள் தங்களின் பழைய ஞாபங்களை பேசுகிறார்கள். ஜெய் தனது மனைவி ஷிவதா மகள் ஆகியோரைப் பற்றியும் ஜஸ்வர்யா தன் கணவர் ஒருவர் கொடுக்காரன் என்று கூறுகிறார். ஆபீஸ் வேலை முடிந்து விட்டது இனி நாம் சென்னை வந்ததும் மீண்டும் சந்திக்கவே வேண்டும் என கூறி விட்டு செல்கிறார் ஜெய்.
சென்னை வந்ததும் ஜஸ்வர்யா கணவர் அம்ஜத்துடன் கடும் சண்டை பிடித்து வீட்டை விட்டு வெளியே வருகிறார். அதன் பின்னர் ஜெய்யிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துகிறார். ஜெய் முடியாது என கூறி அவரின் நம்பரை ப்ளாக் செய்கிறார். இதனால் கோபம் அடைதும் ஜஸ்வர்யா ஜெய்யை மிரட்ட ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் ஜெய் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் எதிர் வீட்டில் குடி வருகிறார் அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
காதலித்து பிரிந்து வேரு ஒருவரை திருமணம் செய்து கொண்ட இருவர் மீண்டும் சந்தித்து பேசினாலே அதற்கு இந்த உலகம் வைக்கும் பெயர் கள்ளக் காதல். அப்படி இந்த படத்தை யாரும் சொல்லி விடக்கூடாது என்பதற்காக திரைக்கதையை பார்த்து பார்த்து நெத்தியடி வசனங்களுடன் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் அவர்கள் வாழ்த்துக்கள்.
மிக நீண்ட வருடங்களுக்கு பின்னர் நிறைவான ஒரு நடிப்பை திரையில் கொடுத்திருகிறார் ஜெய். உருகி உருகி காதலித்த காதலியை 8 வருடங்கள் கழித்து பார்த்ததும் இவர் வெளிக்காட்டும் மகிழ்ச்சி மீண்டும் அவருடன் இணைந்து ஊரை சுற்றுவது என அற்புதமான அந்த உணர்வை ரசிகர்களின் மனதுக்குள் இதமாக அந்த உணர்வை செலுத்துகிறார். முன்னாள் காதலி அதனால் உன்னுடன் பேசினேன் தவிர வேறு எந்த ஒரு கெட்ட என்னமும் எனக்குள் இல்லை என்ககு என் மனைவி, மகள்தான் முக்கியம் என பேசும் இடங்களில் ஒரு நேர்மையான கணவனாவும், அப்பாவாகவும் உயர்ந்து நிற்கிறார். படத்தின் இறுதி காட்சியில் ரயில் நிலையத்தில் அமர்ந்து இருவரும் பேசும் இடத்தில் இவர் பேசும் ஒரு வார்த்தை இவரின் மனம் எப்படிப்பட்ட இவரின் குணம் எப்படிப்பட்டது என்பதை நமக்கு மிகவும் அழகாக ஒரு வரியில் சொல்லி விட்டு நகர்கிறார்.
ஜெய்யின் முன்னாள் காதலியாக வரும் ஜஸ்வர்யா ராஜேஷ் தன் பழைய காதலை மீண்டும் வெளிப்படுத்தும் காட்சிகள் நடிப்பின் உச்சம். இடைவேளைக்கு பின்னர் போக போக வில்லியாக மாறுகிறார். அதன் பின்னர் வில்லி இல்லை என அடுத்த அடுத்த காட்சிகளில் சரி செய்து விடுகிறார் இயக்குநர். இது வரைக்கும் ஆண்களின் காதல் வலிகளை மட்டுமே அதிகமாக பதிவு செய்துள்ள தமிழ் சினிமாவில் ஒரு பெண்ணின் காதல் வலி எப்படி இருக்கும் என்பதை மிகவும் உணர்ந்து தன் நடிப்பால் வெளிப்படுத்தியுள்ளார் ஜஸ்வர்யா ராஜேஷ்.
ஜெய்யின் மனைவியாக வரும் ஷிவதா பாசமான மனைவியாக மிகவும் இயழ்பான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். தன் பாசமான கணவன் தடம் புரண்டு போகும் போது அதை அறிந்து கொண்டு ஜெய்யின் பேசும் காட்சிகளில் அந்த கதாப்பாத்திரத்தில் மீது பரிதாபத்தை அதிகரிக்க வைக்கிறார். ஒரு சில காட்சிகளில் மட்டுமே வரும் ஜஸ்வர்யா ராஜேஷ் கணவன் அம்ஜத். கொடுமைக்கார கணவராக நம்மை அவர் மீது கோபப்பட வைக்கிறார். ஜெய்யின் மகளாக வரும் பேபி வரித்தி விஷால் நண்பனாக வரும் அப்துல் லீ இருவருமே நிறைவான நடிப்பு.
ரவிவர்மன் ஒளிப்பதிவும், சுரேந்தர்நாத்தின் வசனங்களும் படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் ரசிக்க வைக்கிறது. சித்துகுமார் பாடல்லும் சரி பின்னணி இசையும் சரி ஏமாற்றம்.
படத்தில் அதிகமான காட்சிகளை ஜெய் மற்றும் ஜஸ்வர்யா ராஜேஷ் இருவருமே ஆக்கரமைப்பு செய்து கொள்கிறார்கள். எந்த ஒரு திருப்பவும் இல்லாமல் திரைக்கதை நகர்வதும் இப்படத்தின் கிளைமாக்ஸ் இப்படத்தான் இருக்கும் என்று நம்மால் ஈஸியாக யூகித்து விட முடிவது கொஞ்சம் நெருடல்.
கிளைமாக்ஸ் காட்சியில் ஜெய் பேசும் ஒவ்வொரு வசனமும் உண்மை காதல் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லி விடுகிறது !
Theera Kaadhal Review By CineTime