Connect with us
 

News

இயக்குநர் கஜேந்திரன் இன்று காலமானார் !

Published

on

தமிழ் சினிமாவின் இயக்குநர் நடிகர் டி.பி.கஜேந்திரன் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.

1988-ம் ஆண்டு வெளியான வீடு மனைவி மக்கள் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து எங்கள் ஊரு காவல் காரன், பாட்டு வாத்தியார், பாசமுள்ள பாண்டியரே, பட்ஜெட் பத்ம நாபன், மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவம், சீனா தானா ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் மகனே என் மருமகனே.

படங்கள் இயக்கிய வந்த இவர் சமீப காலமாக படங்கள் காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து வந்தார்.சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று வீடு திரும்பியிருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார் இவருக்கு வயது 68 ஆகும்.

இவரின் மறைவுக்கு சினிமாத்துறையிர் பலர் இரங்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Continue Reading