News
நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் விஜய்சேதுபதி திரைப்படம் !

புதுமுக இயக்குநர் பிரசாத் தீனதயாளன் விஜய்சேதுபதி நடித்த திரைப்படம் துக்ளக் தர்பார் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் நாயகிளாக நடித்திருக்கிறார்கள். பார்த்திபன் இப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் அனைத்து பணிகளும் தயாராகி வெளியீட்டுக்கு தயாரான நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் தற்போதைக்கு திறக்காததால் இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து சன் டிவி இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை வாங்கியுள்ளது. இதனால் வரும் விநாயகர் சதுர்த்தியில் இந்த படம் நேரடியாக சன் டீவியில் துக்ளக் தர்பார் ஒளிப்பரப்பாகவிருப்பதாக கூறப்படுகிறது. அதன் பின்னரே சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.