News
வாரிசு படத்தின் புரொடக்சன் டிசைனர் சுனில் பாபு மாரடைப்பால் மரணம் !

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து இம்மாத 11-ம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் வாரிசு. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் இப்படத்தை 80 கோடி செலவில் இப்படத்தை உருவாக்கியுள்ளார்.
விஜய்யுடன் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஶ்ரீகாந்த், ஷ்யாம், குஷ்பு ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இரு தினங்களுக்கு முன்னர் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தில் புரொசக்சன் டிசைனராக பணியாற்றிவர் சுனில் பாபு இன்று மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளதாக அவரது சோசியல் மீடியாவில் ஒரு சோகமான தகவல் வெளியாகியுள்ளது. 50 வயதாகும் சுனில் பாபு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் பணியாற்றியுள்ளார்.